சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘மதராஸி’ திரைப்படம், வார நாட்களில் வசூலில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், இப்படம் பெரும் எதிர்பார்க்கப்பட்ட ₹100 கோடி வசூல் இலக்கை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நேற்று (10), புதன்கிழமை, படத்தின் ஆறாவது நாள் இந்திய வசூல் வெறும் ₹2.25 கோடியாகக் குறைந்துள்ளது. இதுவரை, 6 நாட்களில் உலகளவில் இப்படம் சுமார் ₹76 கோடி வரை வசூலித்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வசூல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், படத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் நோக்கில், பிரபலங்கள் படத்தைப் பாராட்டி வருகின்றனர். இயக்குநர்கள் ஷங்கர், லிங்குசாமி ஆகியோரைத் தொடர்ந்து, நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் படத்தைப் பார்த்துப் பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.
வரும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் அதிகரித்தால் மட்டுமே, ₹100 கோடி வசூலை எட்டுவது சாத்தியமாகும் என வர்த்தக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
