தொடரும் அரசியல் சந்திப்புகள்: தங்காலையில் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தார் மஹிந்த அமரவீர!
தங்காலை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று (07) தங்காலையில் உள்ள அவரது கார்ல்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
மஹிந்த ராஜபக்ஷவின் சுகநலன்களை விசாரிப்பதற்காகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக உத்தியோகப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டாலும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து இருவரும் கலந்துரையாடியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்திருந்த நிலையில், இன்றைய சந்திப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லம், புதிய அரசியல் கூட்டணிகளுக்கான பேச்சுவார்த்தை மையமாக மாறி வருகிறதா என்ற கேள்வியை இந்தத் தொடர் சந்திப்புகள் அரசியல் அரங்கில் எழுப்பியுள்ளன
