Headlines

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது!

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய நெவில் வன்னியாராச்சி, இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை ஒன்றிற்காக இன்று (02) ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த அதிரடிக் கைது, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *