குண்டு துளைக்காத வாகனத்தைத் திருப்பியளித்தார் மஹிந்த
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம், மீண்டும் திருப்பியளிக்கப்பட்டுள்ளது.
நேற்று (03) குறித்த நிறுவனம் ஊடாக அந்த வாகனம் திருப்பியளிக்கப்பட்டதாக, அவரது ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான மனோஜ் கமகே விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், தனது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து அவர் வெளியேறியதைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, அரசியல் அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளது.
