Headlines

தனிப்பட்ட பழிவாங்கல் நடக்கிறது”: மஹிந்த ராஜபக்ஷ குற்றச்சாட்டு

கொழும்பு: தனது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், நாட்டில் தற்போது “தனிப்பட்ட பழிவாங்கல்களால் இயக்கப்படும் அரசியல் பயங்கரவாதம்” இடம்பெறுவதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

தனது திறமையின்மையை மறைக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகளின் கூற்றுக்களுக்குத் தான் செவிசாய்க்கத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், “தன்னைத் தூக்கிலிட வேண்டும்” எனக் கூறப்படும் கருத்துக்களுக்கும் பதிலளித்துள்ளார். “இந்த ஒற்றையாட்சித் தாய்நாட்டிற்குத் துரோகம் செய்பவர்களுக்கு எதிராக, எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் நான் எழுந்து நிற்பேன்,” என அவர் சூளுரைத்துள்ளார்.

தனது புதல்வர் நாமல் கூறியது போல, “எல்லாம் தொடங்கிய கிராமத்திற்கே தான் திரும்பி வந்துள்ளதாகவும்,” “தாங்கள் கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாகவே இங்கு பயணம் செய்தேன்,” எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *