கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் மனுஷ நாணயக்கார
கொழும்பு: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) தான் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்து, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எதிர்பார்ப்புப் பிணை கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று (26) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இது தொடர்பாக தமது சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக, எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் அறிவித்தல் விடுத்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மனுஷ நாணயக்காரவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
