கொழும்பு: இலங்கையின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால், கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளிலிருந்து ‘ஐஸ்’, ஹாஷிஷ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
கடற்படையினரால் மீட்கப்பட்டு, இன்று (14) காலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட இந்தப் பாரிய போதைப்பொருள் தொகுதி, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘உனகுருவே சாந்தா’ என்பவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என கடற்படை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
தெற்குக் கடற்கரையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, கடலில் மிதந்த இந்தப் பொதிகள் முதலில் தென்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
