Headlines

மித்தெனியவில் மீட்கப்பட்டவை ‘ஐஸ்’ தயாரிக்கும் இரசாயனங்களே: அரச பகுப்பாய்வாளர் அறிக்கை உறுதி!

கொழும்பு: மித்தெனிய பகுதியில் கைப்பற்றப்பட்ட கொள்கலன்களில் இருந்த இரசாயன மாதிரிகள், மெத்தம்பெட்டமைன் (‘ஐஸ்’) போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுபவையே என அரச பகுப்பாய்வுத் திணைக்களம் உறுதி செய்துள்ளது. கைப்பற்றப்பட்ட மாதிரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வகப் பரிசோதனைகளை அடுத்தே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்காகவே இந்த இரசாயனப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்ற பொலிஸாரின் ஆரம்பகட்ட சந்தேகத்தை இந்த அறிக்கை வலுப்படுத்தியுள்ளது. இந்த குற்றச் செயலுடன் தொடர்புடைய சம்பத் மான்பெரி என்பவர் சமீபத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *