Headlines

வசீம் தாஜுதீன் கொலைக் குழுவில், மித்தெனியவில் கொல்லப்பட்ட ‘கஜ்ஜா’வும் இருந்துள்ளார்: பொலிஸார் அதிர்ச்சித் தகவல்!

கொழும்பு: பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலைக்காகச் சென்ற குழுவில், சமீபத்தில் மித்தெனியவில் தனது இரு பிள்ளைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அருண விதாநகமகே என்ற ‘கஜ்ஜா’ என்பவரும் அங்கம் வகித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (30) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் இந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். தாஜுதீன் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாட்டின் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இரண்டு முக்கிய கொலைச் சம்பவங்களுக்கு இடையில் தொடர்பு கண்டறியப்பட்டுள்ளமையானது, குற்றவியல் புலனாய்வுத் துறையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *