கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், மக்கள் அனுதாபத்தைப் பெறுவதற்காக நாடகங்களை அரங்கேற்றி வருவதாக, கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (11) உரையாற்றிய அவர், “உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பிறகு, தங்களுக்குச் செல்ல இடமில்லை எனக் கூறி, SLPPயும் ராஜபக்ஷக்களும் அனுதாபம் தேட முயற்சிக்கின்றனர்,” என்றார்.
“முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம், நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, நாட்டைச் சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளோம்,” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
