கொழும்பு: தனது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியது குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ‘X’ சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
“எனது தந்தை, கொழும்பில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி, எல்லாம் தொடங்கிய இடமான தங்காலையை வந்தடைந்துள்ளார். உண்மையான பலம் என்பது எமது வேர்களிலிருந்தும், மக்களின் அன்பிலிருந்தும் வருகிறதே தவிர, பதவிகள் அல்லது சிறப்புரிமைகளிலிருந்து அல்ல என்பதற்கு இது ஒரு நினைவூட்டல்,” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்கும் புதிய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்தே, மஹிந்த ராஜபக்ஷ தனது விஜேராம இல்லத்திலிருந்து நேற்று (11) வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
