நேபாளத்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ்: 19 ஓட்டங்களால் வீழ்த்தி வரலாற்று வெற்றி!
ஷார்ஜா: ஷார்ஜாவில் நேற்று (27) நடைபெற்ற முதல் T20 போட்டியில், இரண்டு முறை உலக சம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை, நேபாள அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி, கப்டன் ரோஹித்தின் 38 ஓட்டங்களின் உதவியுடன், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர், 149 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நேபாளம் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்த வெற்றி ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
