Headlines

நேபாளப் பிரதமர் ராஜினாமாவுக்குப் பின்னால் அமெரிக்காவா? – சீனச் சார்பு நிலைப்பாடே காரணமா எனச் சர்ச்சை!

காத்மண்டு: நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது சீனச் சார்பு நிலைப்பாட்டின் காரணமாகவே, அமெரிக்காவின் தலையீட்டால் இந்த ஆட்சி கவிழ்ப்பு நிகழ்ந்திருக்கலாம் எனச் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (SCO) கலந்துகொண்டு திரும்பிய பிரதமர் ஒலி, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஒலியின் அரசாங்கம், சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் இணைந்தது போன்ற அவரது சீன ஆதரவுக் கொள்கைகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்திய ஆதரவுத் தலைவராகக் கருதப்பட்ட வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மக்கள் போராட்டத்தால் பதவியிழந்ததைப் போலவே, சீன ஆதரவுத் தலைவரான ஒலியின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டுள்ளதாகப் பகுப்பாய்வாளர்கள் ஒப்பிடுகின்றனர். இந்த “ஜென் Z” போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்காவின் சிஐஏ-யின் கை இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *