விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான புதிய சட்டம் அமுலுக்கு வந்தது: சபாநாயகர் கையொப்பமிட்டார்!
கொழும்பு: விளையாட்டில் ஊக்கமருந்துப் பாவனைக்கு எதிரான சாசன (திருத்த) சட்டமூலத்தில், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன நேற்று (07) கையொப்பமிட்டு அமுலுக்குக் கொண்டுவந்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்தச் சட்டமூலம், வாக்கெடுப்பு மற்றும் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், இலங்கையின் ஊக்கமருந்து எதிர்ப்புச் சட்டங்கள், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் (WADA) சர்வதேசத் தரங்களுக்கு ஏற்ப நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டின் 33ஆம் இலக்கச் சட்டத்தைத் திருத்தும் இந்தச் சட்டமூலம், 2025ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க ஊக்கமருந்துக்கு எதிரான சாசன (திருத்த) சட்டமாக இனி நடைமுறைக்கு வரும். இது, நாட்டின் விளையாட்டுத் துறையில் ஒரு முக்கிய சீர்திருத்தமாகும்.
