Headlines

வம்பர் 02 – இன்றைய வானிலை: 4 மாகாணங்கள், அம்பாறை மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிக்குப் பின் மழை.

கொழும்பு – இன்று (நவம்பர் 02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அத்துடன் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் எனவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *