ICC T20I பந்துவீச்சாளர் தரவரிசை: நுவன் துஷார 8ஆம் இடத்திற்கு முன்னேற்றம், வனிந்து 6ஆம் இடத்தில் நீடிப்பு!
கொழும்பு: சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள ஆண்களுக்கான T20I தரவரிசையில், இலங்கை பந்துவீச்சாளர்கள் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நுவன் துஷார முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளதுடன், வனிந்து ஹசரங்க தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
சமீபத்திய ஆசியக் கிண்ணத் தொடரில் வெளிப்படுத்திய அபாரமான பந்துவீச்சைத் தொடர்ந்து, வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார, பந்துவீச்சாளர் தரவரிசையில் 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க, பந்துவீச்சாளர் மற்றும் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை ஆகிய இரண்டிலும் தனது 6ஆம் இடத்தைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் பெரேரா முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ள நிலையில், தற்போது பந்துவீச்சிலும் இரண்டு வீரர்கள் முதல் 10 இடங்களுக்குள் இருப்பது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கை அணியின் பலத்தைக் காட்டுகிறது.
