Headlines

சுப முகூர்த்த தினம்! (Oct 24) – அனுஷம் நட்சத்திரம், சித்த யோகம் – 12 ராசி பலன்கள்!

இன்று அக்டோபர் 24, 2025, வெள்ளிக் கிழமை, ஐப்பசி மாதம் 7, விசுவாசுவ வருடம்.

இன்று திரிதியை திதி, அனுஷம் நட்சத்திரம், மற்றும் நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய தினம். இன்றைய தினம் சுப முகூர்த்த தினம் ஆக அமைந்துள்ளது, சுப காரியங்கள் செய்வதற்கு மிகவும் உகந்த நாள்.

இன்றைய ஜோதிட சிறப்பம்சம்: இன்று அதிகாலை 4.36 மணி வரை ரேவதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் தொடர்ந்தது. அதன் பின்பு, அஸ்வினி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் ஆரம்பமாகிறது.

இன்றைய பஞ்சாங்க விவரங்கள் (Oct 24, 2025)

  • திதி: இன்று இரவு 11.49 மணி வரை திரிதியை, பின்பு சதுர்த்தி திதி.
  • நட்சத்திரம்: இன்று அதிகாலை 4.36 மணி வரை விசாகம், பின்பு அனுஷம்.
  • யோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.
  • சந்திராஷ்டம ராசி: இன்று அதிகாலை 4.36 மணி வரை ரேவதி, பின்பு அஸ்வினி.
  • சூலம்: மேற்கு (பரிகாரம்: வெல்லம்).

சுப மற்றும் அசுப நேரங்கள்

நல்ல நேரம்:

  • காலை: 9.30 மணி முதல் 10.30 மணி வரை
  • மாலை: 4.30 மணி முதல் 5.30 மணி வரை

கெளரி நல்ல நேரம்:

  • காலை: 12.15 முதல் 1.15 வரை
  • மாலை: 6.30 முதல் 7.30 வரை

அசுப நேரங்கள்:

  • இராகு காலம்: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
  • எமகண்டம்: பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை
  • குளிகை: காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை

12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்

மேஷம் இன்று உங்களுக்கு நம்பிக்கையும் மன உறுதியும் அதிகரிக்கும். இதனால் சவால்களை எளிதாக எதிர்கொண்டு இலக்குகளை அடைவீர்கள். வேலைகளை சரியாக முடிக்க முடியும். இன்று உங்களின் படைப்பாற்றல் மற்றும் கலை திறமை மேல் அதிகாரிகளைக் கவரும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் பெற வாய்ப்பு உண்டு. நிதிநிலை மேம்படக்கூடிய நாள்.

ரிஷபம் ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். கோபப்பட்டு எந்த விஷயத்திற்கும் எதிர்வினை ஆற்ற வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். இன்று வாடிக்கையாளர்கள் அல்லது சக ஊழியர்களுடன் இணக்கமான உறவை காப்பது நல்லது. இன்று பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்தவும். வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யவும்.

மிதுனம் இன்று அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களுடைய முக்கிய வேலைகளை தள்ளிப் போட வேண்டாம். வேலை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று உங்களுடைய ஆசைகளை தள்ளி போட வேண்டியது இருக்கும். நிதிநிலை ரீதியாக முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள்.

கடகம் கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு நிதி ஆதாயம் அதிகரிக்கும். சமூகத்தில் அங்கீகாரத்தை பெறுவீர்கள். உங்கள் வேலை தொடர்பாக புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். இன்று புதிய நபர்களை சந்திக்கவும், முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டு. உங்கள் மனதில் பதட்டமான நிலை இருக்கும். உடல் நலனில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கவும்.

சிம்மம் சிம்ம ராசி நண்பர்களுக்கு தைரியம் மற்றும் ஆற்றல் அதிகரிக்கும். இதனால் வேலைகளை வேகமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை எட்ட முடியும். வேலை, தொழில் தொடர்பாக பயணங்கள் நேர்மறையான பலனை தரும். இன்றைய நிதிநிலை முன்னேற்றம் இருந்தாலும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

கன்னி கன்னி ராசி அன்பர்களே இன்று உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். இன்று பிறரின் நம்பிக்கைகளில் தலையிட வேண்டாம். அதேபோல உங்களின் கருத்துக்களை பிறரிடம் திணிக்க வேண்டாம். வேலைகளை முடிப்பதில் கவனமாக இருக்கவும். நிலம் அல்லது சொத்து தொடர்பான தகராறுகளில் இருந்து விலகி இருக்கவும். உங்கள் எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.

துலாம் இன்று உங்களுடைய ஆற்றல் மற்றும் வலிமையை அதிகரிக்க கூடிய நாள். முதலீடு தொடர்பான விஷயங்களில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதே சமயம் அனுபவசாலிகள் ஆலோசனை பெற்ற பின்னரே முதலீடு செய்யவும். நிதி சார்ந்த திட்டமிடலில் வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் உற்சாகம் நிறைந்திருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் மேம்படும்.

விருச்சிகம் விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் எண்ணங்களில் தெளிவாக இருக்கவும். இன்று கடந்த கால தவறுகளை திருத்தி கொண்டு செயல்படுவது நல்லது. இன்று யாரையும் அதிகம் நம்ப வேண்டாம். நிதி ரீதியாக சாதகமான நாளாக இருக்கும். செல்வங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பட்ஜெட் போட்டு செயல்படவும்.

தனுசு இன்று உங்களுடைய குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும். இன்று உங்களிடம் சிந்தனை மட்டும் உள்ளுணர்வு பாராட்டை பெற்றுத்தரும். திட்டங்களை செயல்படுத்துவது அல்லது விவாதிப்பீர்கள். நிதிநிலை முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு விஷயங்களில் அக்கறை காட்டவும். இன்று உங்களுடைய குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற சாதகமான சூழ்நிலை நிலவும்.

மகரம் மகர ராசி அன்பர்களுக்கு ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய வியாபாரம், தொழில் தொடர்பில் விரும்பிய வெற்றியை அடையலாம். இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் பேச்சு செயல்பாடுகளில் நிதானம் தேவை.

கும்பம் கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். உங்கள் வேலையில் பாதகமான சூழல் இருக்கும். நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் நிதானமாக இருக்கவும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்ப்பதோடு, எதிர்மறை நபர்களிடமிருந்து விலகி இருக்கவும். இன்று ஒரு சர்ச்சையிலும் ஈடுபட வேண்டாம்.

மீனம் மீன ராசி அன்பர்களுக்கு இன்று உணர்ச்சி வசப்பட வாய்ப்பு உண்டு. இன்று ஆக்கப்பூர்வமான மன நிலையுடன் செயல்படுவீர்கள். புதிய வணிக ஒப்பந்தங்கள் கிடைக்கும். அனைவரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். முடிவுகள் எடுப்பதில் நிதானம் தேவை. நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *