2024 O/L மீள் பரிசீலனை முடிவுகள் வெளியீடு; 2025 O/L விண்ணப்ப முடிவுத் திகதி இன்று நள்ளிரவு!
கொழும்பு: 2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான நிகழ்நிலை (online) விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி, இன்று (09) நள்ளிரவுடன் நிறைவடைவதாகவும் திணைக்களம் கடுமையாக எச்சரித்துள்ளது. எக்காரணம் கொண்டும் கால நீடிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி, www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையதளங்கள் மூலம் தமது மீள் பரிசீலனை முடிவுகளைப் பார்வையிடலாம். இது தொடர்பான மேலதிக கல்விச் செய்திகள் மற்றும் விபரங்களுக்கு 1911 என்ற அவசர இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம்.
