உலகின் சிறந்த வீரருக்கான ‘பாலன் டி’ஓர்’ விருதை வென்றார் பிரான்ஸின் உஸ்மான் டெம்பேலே!
பாரிஸ்: பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) கழகத்தின் பிரெஞ்சு முன்கள வீரரான உஸ்மான் டெம்பேலே, உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான மதிப்புமிக்க பாலன் டி’ஓர் விருதை வென்றார். பாரிஸில் நேற்று (22) இரவு நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
கடந்த பருவத்தில், பிஎஸ்ஜி அணி தனது முதல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்ல டெம்பேலே முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். இந்த விருது வழங்கும் விழாவில், பிஎஸ்ஜி கழகம் ஆண்டின் சிறந்த அணியாகவும், அதன் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் என்ரிக்கே சிறந்த பயிற்றுவிப்பாளராகவும், கோல்கீப்பர் ஜியான்லூஜி டோனருமா சிறந்த கோல்கீப்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மகளிருக்கான பாலன் டி’ஓர் விருதை, பார்சிலோனாவின் நட்சத்திர வீராங்கனை ஐடானா பொன்மாட்டி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்தார். கால்பந்து உலகில் இந்த விருதுகள் பெரும் கௌரவமாகக் கருதப்படுகின்றன.
