ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் மோதல்: வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
துபாய்: நேற்று (25) துபாயில் நடைபெற்ற ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டியில், வங்கதேசத்தை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில், பரம எதிரியான இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதவுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. ஆனால், பின்னர் பந்துவீச்சில் பதிலடி கொடுத்தது.
ஷாஹீன் ஷா அப்ரிடி (3/17) மற்றும் ஹரிஸ் ரவூப் (3/33) ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால், வங்கதேச அணியை 124 ஓட்டங்களுக்குள் பாகிஸ்தான் கட்டுப்படுத்தி, த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தத் தொடரில் ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவிடம் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான், மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் சந்திக்கிறது. “ஞாயிறன்று இந்தியாவை வீழ்த்த முயற்சிப்போம்,” என பாகிஸ்தான் கப்டன் சல்மான் ஆகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
