ICC T20I துடுப்பாட்ட வீரர் தரவரிசை: முதல் 10 இடங்களுக்குள் நிஸ்ஸங்க, குசல் பெரேரா
கொழும்பு: சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள ஆண்களுக்கான ICC T20I துடுப்பாட்ட வீரர் தரவரிசையில், இலங்கை வீரர்கள் பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் பெரேரா ஆகியோர் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். பெத்தும் நிஸ்ஸங்க 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், குசல் பெரேரா முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து, 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நிறைவடைந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இவ்விரு வீரர்களும் வெளிப்படுத்திய அபாரமான துடுப்பாட்டமே இந்த முன்னேற்றத்திற்குக் காரணமாகும். குறிப்பாக, இந்திய அணிக்கு எதிராக பெத்தும் நிஸ்ஸங்க அடித்த சதம், அவருக்குப் பல புள்ளிகளைப் பெற்றுத் தந்துள்ளது.
உலகின் முதல் 10 துடுப்பாட்ட வீரர்களுக்குள், இலங்கையின் இரண்டு வீரர்கள் இடம்பெற்றிருப்பது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கை அணியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
