1
பண்டாரவளை: பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம், இவ்வருட இறுதிக்குள் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும் என <a href=”https://en.wikipedia.org/wiki/Anura_Kumara_Dissanayake” target=”_blank” rel=”noopener”>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க</a> உறுதியளித்துள்ளார். பண்டாரவளையில் இன்று (12) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கான 2,000க்கும் மேற்பட்ட வீட்டு அலகுகளுக்கான காணி உறுதிகளை வழங்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்திய உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீட்டுத் திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் இந்த உறுதிகள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்:
“இந்தத் பெருந்தோட்ட சமூகம், நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. அதேவேளை, 202 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, ஒரு அரசாங்கம் என்ற வகையில், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளையும், கண்ணியமான வாழ்க்கையையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
இதில் இரண்டு முக்கிய விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஒன்று, காணி மற்றும் வீட்டு உரிமையை வழங்குதல். இரண்டாவது, நியாயமான சம்பளத்தை உறுதி செய்தல். 1,750 ரூபாய் நாட் சம்பளம் என்பது அவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும். எப்படியாவது, அந்த உரிமையை இந்த வருடத்திற்குள் வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என ஜனாதிபதி தெரிவித்தார்.
