கல்வி அமைச்சின் நவராத்திரி விழாவில் பிரதமர் பங்கேற்பு
கொழும்பு: “அனைத்து கலாசாரங்களையும், அனைத்து மதங்களையும் மதிக்கும் பண்பை, கல்வி முறைமையினுள்ளேயே பிள்ளைகளிடம் வளர்ப்பது அவசியம்,” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடசாலைகள் விவகாரப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நவராத்திரி விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பல்லின சமூகம் வாழும் இலங்கையில், சிறுவயதிலிருந்தே இத்தகைய நல்லிணக்கப் பண்புகளை வளர்ப்பது, நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
