இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய (Dr. Harini Amarasuriya) அவர்கள், பதவியேற்ற பின்னர் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று (அக்டோபர் 16) புதுடெல்லியில் தரையிறங்கினார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவு மற்றும் வழக்கமான ஈடுபாட்டின் பாரம்பரியத்தை இந்த விஜயம் மேலும் வலுப்படுத்துகிறது.
NDTV உலக உச்சி மாநாட்டில் முக்கிய உரை
தனது விஜயத்தின் போது, பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்கள் NDTV மற்றும் சிந்தன் ஆய்வு நிறுவனத்தினால் (Chintan Research Foundation) டெல்லியில் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் NDTV உலக உச்சி மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
“நிச்சயமற்ற காலங்களில் மாற்றத்தை வழிநடத்துதல்” (“Steering Change in Uncertain Times”) என்ற தலைப்பில் அவரது உரை அமையும்.
