Headlines

சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கொழும்பு: சீனாவில் நடைபெற்ற ‘2025 பெண்கள் தொடர்பான உலகத் தலைவர்கள் மாநாட்டில்’ கலந்துகொள்வதற்காக சீனாவுக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (15) அதிகாலை நாடு திரும்பினார்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கடந்த 11ஆம் திகதி பயணமான பிரதமர், தனது மூன்று நாள் விஜயத்தின் இறுதி நாளான நேற்று (14), பெய்ஜிங்கில் உள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் விஜயம் செய்த பிரதமர், அங்கே Huawei டெக்னொலொஜிஸ் நிறுவனப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட ‘ஸ்மார்ட் வகுப்பறை’ (Smart Classroom) திட்டம் குறித்த விளக்கத்தையும் கேட்டறிந்தார்.

தனது உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளை முடித்துக்கொண்ட பிரதமர், நேற்று இரவு சீனாவிலிருந்து புறப்பட்டு, இன்று அதிகாலை 4.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-881 மூலம் குவாங்சோவிலிருந்து இலங்கையை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின்போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் உயர்மட்ட சந்திப்புகளிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *