NDTV உலக உச்சிமாநாட்டில் பிரதமர் ஹரிணி: இந்தியப் பிரதமர் மோடியுடன் பங்கேற்பு!
கொழும்பு: இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறவுள்ள ‘NDTV உலக உச்சிமாநாடு 2025′-இல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொள்ளவுள்ளார்.
ஒக்டோபர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த உயர்மட்ட சர்வதேச மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
‘தெரியாதவற்றின் விளிம்பில்: இடர். தீர்மானம். புதுப்பித்தல்’ என்பதே இம்மாநாட்டின் இவ்வருட தொனிப்பொருளாகும்.
