மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்கர்களைச் சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி!
கண்டி: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (03) கண்டிக்கு விஜயம் செய்து, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர், அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்ற அவர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர், அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து, அவரது சுகநலன்கள் குறித்து விசாரித்து, ஆசி பெற்றார். இந்தச் சந்திப்புகள், அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறுகின்றன.
