யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் நேற்று (01) பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த பின்னர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கச்சத்தீவுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அத்மிரால் புத்திக லியனகமகே ஆகியோரும் ஜனாதிபதியுடன் இணைந்திருந்தனர்.
முன்னதாக, யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகள் மற்றும் யாழ். பொது நூலகத்தின் மின்-நூலகத் திட்டம் ஆகியவற்றை ஜனாதிபதி நேற்று ஆரம்பித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.