கொழும்பு: இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159ஆவது ஆண்டு நிறைவு தினம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (03) கொழும்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வின்போது, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றைக் கையளித்தார். நிகழ்வில் உரையாற்றிய பொலிஸ் மா அதிபர், இவ்வருடத்தில் இதுவரை 1,612 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 17 பாதாள உலகக் குற்றவாளிகள் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.