ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்கா பயணம்!
கொழும்பு: 80ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் (UNGA) கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) அமெரிக்காவிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை (24) பிற்பகல் 3.15 மணியளவில் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார். மேலும், ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபடவுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றிலும் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் ஜனாதிபதியுடன் உடன் செல்கிறார். இது நாட்டின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
