யாழ்ப்பாணம்: குடிவரவு-குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம், இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், வழக்கமான அரசியல் கலாச்சாரத்தை மீறி, திறப்பு விழா நினைவுப் பலகையில் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படாதது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரைநீக்கம் செய்யப்பட்ட பலகையில், “பொதுமக்களது நிதியைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட… மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தலைவர்களின் பெயர்களுக்குப் பதிலாக, மக்கள் நிதியையும், ஜனாதிபதி என்ற பதவியையும் மாத்திரம் குறிப்பிடும் இந்த புதிய நடைமுறை, சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.