ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு: ஊழலற்ற முதலீட்டுச் சூழலுக்கு அரசு உத்தரவாதம்!
டோக்கியோ: ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, டோக்கியோவில் நேற்று (29) காலை ஜப்பானின் முன்னணி வர்த்தகத் தலைவர்களுடனான வட்டமேசை கலந்துரையாடலில் பங்கேற்றார். இலங்கையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், “நாட்டில் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும், மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் தற்போதைய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது,” என ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
இலங்கையின் முக்கிய பொருளாதாரப் பங்காளியாக, ஜப்பானுடனான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
