Headlines

ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் ஜனாதிபதி சந்திப்பு: ஓராண்டுப் பயணம் குறித்து விளக்கம்!

டோக்கியோவில் உள்ள Reiyukai மண்டபத்தில் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் ஒரு கூட்டத்தில் இன்று (28) பிற்பகல் நான் கலந்து கொண்டேன்.

ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் ஜப்பானில் வாழும் மகாசங்கத்தினர், மதத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் ஒன்று கூடியதோடு அவர்களின் நலனைப் பற்றி விசாரித்த நான் அவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினேன்.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல், மோசடி மற்றும் ஊழல் அற்ற ஆட்சியை நிறுவுதல், அரச இயந்திரத்தை செயற்திறனுள்ளதாக மாற்றுவதற்கு எடுத்த நடவடிக்கைகள், இராஜதந்திர சமநிலையைப் பேண மற்றும் தேசிய ஒற்றுமையைப் பாதுகாத்தல் ஆகிய துறைகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வலுவான அடித்தளத்தைப் பற்றி இங்கு நான் தெளிவுபடுத்தியதோடு அரசாங்கத்தின் ஒரு வருட பயணத்தின் வெற்றியை அதன் அடிப்படையிலேயே மதிப்பிட வேண்டும் என்பதையும் நான் சுட்டிக்காட்டினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *