ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு!
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை நேற்று (23) பிற்பகல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதியை உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வரவேற்றதுடன், கடந்த ஓராண்டில் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர். சர்வதேச அரங்கில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
