Headlines

ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று இரவு சந்திப்பு!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸை இன்று (25) இரவு (இலங்கை நேரப்படி) சந்திக்கவுள்ளார். இந்த முக்கிய சந்திப்பைத் தவிர, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாள் முழுவதும் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *