Headlines

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்கா, ஜப்பான் விஜயம்!

கொழும்பு: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் ஜப்பானுக்கும் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா செல்கிறார். அங்கு அவர், பல நாட்டுத் தலைவர்களையும், ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். நியூயோர்க் நிகழ்வுகளைத் தொடர்ந்து, செப்டம்பர் 26ஆம் திகதி, ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் ஜப்பான் செல்கிறார். அங்கு, உலக எக்ஸ்போ சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வதுடன், ஜப்பானியத் தலைவர்களுடன் உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு, சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *