முல்லைத்தீவு: தனது வட மாகாண விஜயத்தின் இரண்டாம் நாளான இன்று (02), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வன்னிப் பிராந்தியத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். புதுக்குடியிருப்பில் புதிய ‘தென்னை முக்கோண’ வலயம் ஸ்தாபித்தல் மற்றும் வட்டுவாகல் பால புனரமைப்புப் பணிகள் ஆகியவை இதில் பிரதானமானவையாகும்.
உலக தென்னை தினமான இன்று, வடக்கு தென்னை முக்கோணத்தைப் புத்துயிரூட்டும் “கற்பத்தருவின் சக்தி” என்ற செயற்றிட்டத்தை, ஜனாதிபதி புதுக்குடியிருப்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கிறார். இதன் கீழ், வட மாகாணத்தின் முதலாவது தென்னங்கன்று உற்பத்தி நிலையம் பளையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார். பழுதடைந்து, மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இப்பாலத்திற்குப் பதிலாக, 140 கோடி ரூபாய் (1.4 பில்லியன்) மக்கள் வரிப்பணத்தில் புதிய இரண்டு வழிப் பாலம் அமைக்கப்படவுள்ளது.
2 thoughts on “ஜனாதிபதியின் வன்னி விஜயம்: புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவில் அபிவிருத்திப் பணிகள்”