“ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்குச் சொந்தமானது”: பிரதமர் ஹரிணி அமரசூரிய
கண்டி: “கடந்த காலங்களில் ஒரு சிலரின் சிறப்புரிமையாக இருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 100% மக்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது,” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (14) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“மனிதவள அபிவிருத்தியில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது. கல்வியில் செய்யப்படும் முதலீடு, நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடாகும்,” எனவும் அவர் கூறினார். இந்நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவும், “ஜனாதிபதி நிதியம் மக்களுக்குரியது, அதை மக்களிடமே சேர்ப்பது எமது பொறுப்பு,” என்றார்.
