கொழும்பு: விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, இன்று (03) காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய, சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டம் தொடர்பான மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.