Headlines

ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்? – ரணில்-மஹிந்த சந்திப்பால் பரபரப்பு

தங்காலை: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (28) காலை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு விஜயம் செய்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசினார். தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக “ஒன்றிணைந்த போராட்டத்திற்கு” ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்த நிலையிலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது “அரசியல் பயங்கரவாதம்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்த பின்னணியிலும் இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், எதிர்கால எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *