சென்னை: நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை பிரம்மாண்ட விழாவுடன் தொடங்கியுள்ளார். இருப்பினும், அவர் ஏற்கனவே கடன் சுமையில் உள்ள நிலையில், இந்த ஆடம்பரமான தொடக்கம் ஒரு “மிகப்பெரிய விஷப்பரீட்சை” என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு விமர்சித்துள்ளார்.
படத்தின் பூஜைக்கே சுமார் 4 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும், நடிகை ஜெனிலியா போன்ற பிரபலங்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விழாவிற்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இது தேவையற்ற விளம்பரம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மேலும் கூறுகையில், “ரவி மோகனுக்கு தயாரிப்பாளர், இயக்குனர் என முன் அனுபவம் இல்லை. ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார். கந்துவட்டிக்குக் கடன் வாங்கி இப்படி விழா நடத்துவது பெரிய ஆபத்து,” என்றார்.
இந்த புதிய நிறுவனத்தின் கீழ், யோகி பாபுவை வைத்து ஒரு படத்தையும், எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தையும் ரவி மோகன் தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
