Headlines

டொலருக்குப் பதிலாக இந்திய ரூபாய்: ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்

புதுடெல்லி: பிராந்திய வர்த்தகத்தில் அமெரிக்க டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக, இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனான வர்த்தகப் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது. இந்திய ஊடகச் செய்திகளின்படி, இந்த நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்குவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தனது முக்கிய வர்த்தகப் பங்காளிகளுக்கு அதிகாரப்பூர்வ மாற்று விகிதத்தை அறிமுகப்படுத்தவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் செல்வாக்கை அதிகரிக்கும் ஒரு படியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *