Headlines

ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மார்ச் 25இல் விசாரணைக்கு!

ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மார்ச் 25இல் விசாரணைக்கு! கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், தான் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டுக் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (02) திகதியிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில், எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) தான் கைது செய்யப்பட்டதன் மூலம், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரியே, ரிஷாட் பதியுதீன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்தத் திகதி குறிக்கப்பட்டது. இந்த வழக்கு, அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *