புதிய தமிழ் படங்களில் ஒப்பந்தமாகாத சாய் பல்லவி: கலைமாமணி விருது குறித்தும் மௌனம் – காரணம் என்ன?
சென்னை: கடந்த ஆண்டு வெளியான ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகை சாய் பல்லவி வேறு எந்தப் புதிய தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. மேலும், சமீபத்தில் அவருக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும் அவர் இதுவரை மௌனம் காப்பது, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
‘அமரன்’ படத்தில், கதாநாயகன் சிவகார்த்திகேயனை விட சாய் பல்லவியின் நடிப்பிற்கே அதிகப் பாராட்டுக்கள் கிடைத்ததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. இதேபோல, அவரது சமீபத்திய தெலுங்குப் படமான ‘தண்டேல்’ படத்திலும், கதாநாயகனை விட அவருக்கே அதிக பாராட்டு கிடைத்தது.
வெற்றிமாறன்-சிம்பு பட வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படும் நிலையில், தென்னிந்திய திரையுலகில் அவரது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
