Headlines

ஐ.தே.க. மாநாட்டில் சஜித் பிரேமதாச பங்கேற்க மாட்டார்: ஐ.ம.ச. குழுவினர் மட்டும் பங்கேற்பு!

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) 79ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இன்று (20) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அவரது ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழுவொன்று இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ம.ச. கட்சியில் இணைந்ததற்காக, ஐ.தே.க.விலிருந்து நீக்கப்பட்டிருந்த அனைத்து முன்னாள் உறுப்பினர்கள் மீதான தடைகளையும் அக்கட்சி சமீபத்தில் நீக்கியிருந்தது. மேலும், நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *