ரணில் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு CID மீண்டும் அழைப்பு!

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய இங்கிலாந்துப் பயணம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, நாளை (01) காலை 9 மணிக்கு CIDயில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, அவர் ஏற்கனவே ஒருமுறை CIDயில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

One thought on “ரணில் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு CID மீண்டும் அழைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *