Headlines

ஐஸ்’ இரசாயன கொள்கலன் வழக்கு: சம்பத் மான்பெரியை 90 நாட்கள் தடுத்துவைக்க உத்தரவு!

கொழும்பு: மித்தெனிய பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருள் தயாரிப்புக்குரிய இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் கைதாகியுள்ள சம்பத் மான்பெரியை, 90 நாட்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்ய, பதில் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு குறித்து, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் இன்று (26) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். முன்னதாக, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் (PNB) விசாரணை செய்யப்பட்டு வந்த சம்பத் மான்பெரி, கடந்த 23ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த பாரிய போதைப்பொருள் வர்த்தக வலையமைப்பு குறித்த விசாரணைகள் தீவிரமாகத் தொடர்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *