Headlines

ஐஸ்’ போதைப்பொருள் வழக்கு: சரணடையத் தயார் என சம்பத் மான்பெரி அறிவிப்பு – பாதுகாப்பை உறுதி செய்யுமாறு IGPக்கு நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பு: மித்தெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட, ‘ஐஸ்’ போதைப்பொருள் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கியதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன்கள் தொடர்பான வழக்கில் தேடப்பட்டுவரும் சம்பத் மான்பெரி, சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இதனையடுத்து, அவர் சரணடைந்த பின்னர், அவரது பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு (IGP) மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து விசாரணை அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ‘ஐஸ்’ போதைப்பொருள் தயாரிப்பு தொடர்பான இந்த குற்றவியல் வழக்கு குறித்த எழுத்தாணை மனுவொன்றை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *