Headlines

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் ஒக்டோபர் 14 வரை நீட்டிப்பு: வைத்திய அறிக்கை கோரியது நீதிமன்றம்!

கொழும்பு: ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல், எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (30) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், சந்தேகநபருக்கு சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் ஏனைய மருத்துவ நிறுவனங்களில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்த விரிவான அறிக்கையை அடுத்த தவணையின்போது மன்றில் சமர்ப்பிக்குமாறு, சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார். ‘அரகலய’ போராட்டத்தின்போது சேதமடைந்த, மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் அலுவலகத்திற்காக, 8.85 மில்லியன் ரூபாயை நட்டஈடாகப் பெற்றுக்கொண்டதன் மூலம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *