Headlines

நீதவான் விடுமுறை: சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப். 22 வரை நீட்டிப்பு!

கொழும்பு: ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல், எதிர்வரும் 22ஆம் திகதி (திங்கட்கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (19) விடுமுறையில் இருந்த காரணத்தால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. சந்தேகநபரின் பிணை மனு மீதான உத்தரவும் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *